குரோஷியாவில், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடைகொண்ட கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டது.
ரிஜேகா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளின்போது இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, சிறப்பு காவல்படை பிரிவினரால் தகர்க்கப்பட்டது.