மரியுபோல் தியேட்டர் குண்டுவெடிப்பின் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி, செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் உள்ள தியேட்டருக்கு வெளியே மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைனிய அகதிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலர் ஒன்று கூடி, ரஷ்ய மொழியில் "குழந்தைகள்” என எழுதப்பட்ட பதாகையை வைத்து அதன் மீது மெழுகுவர்த்தி ஏற்றி, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்தாண்டு மார்ச் மாதம், உக்ரைனின் மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், அங்கு பதுங்கியிருந்த குழந்தைகள் உட்பட ஏராளமனோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.