வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் உள்நுழைவு அனுமதி முறை நடைமுறையில் இருக்கும் நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய மியான்மர் நாட்டினரை நாடு கடத்தவும், அரசு பதிவுகளில் அவர்களது பெயர் இருந்தால் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதலமைச்சர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.