நாடாளுமன்ற இரு அவைகளும் 5வது நாளாக இன்றும் முடங்கியது. தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேபோல் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து தெரிவித்து கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது முதல் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. 5வது நாளான இன்று இரு அவைகளும் தொடங்கியதும் அமளி ஏற்படவே, திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன