திருமணமான தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பூந்தமல்லியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இவர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், ஜெகன் என்பவரை 3ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், முத்து பிரசாத் என்பவர் அறிமுகமான நிலையில் அவர் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.