அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் மோடி பெரும் போட்டியாளராக இருப்பார் என நோபல் கமிட்டியின் துணை தலைவர் Asle Toje தெரிவித்துள்ளார்.
நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியினர் இந்தியா வந்துள்ள நிலையில், அதன் துணைத்தலைவர் Asle Toje, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அதில், அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவர் பிரதமர் மோடி என்றும், உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், அமைதிக்கான நம்பத்தகுந்த முகங்களில் ஒருவர் என்றும் கூறினார்.
மேலும், இது போருக்கான சகாப்தம் அல்ல என ரஷ்ய அதிபர் புதினிடம், மோடி கூறியதற்காக அஸ்லே அவரை பாரட்டினார்.