தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையே உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில் வடகொரியா கிழக்குக் கடலை நோக்கி நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது.
உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் பிற சவால்கள் குறித்து தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று விதிக்கின்றனர்.
12 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு சந்திப்பு இதுவாகும். டோக்கியோவில் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை வடகொரியா திடீரென ஏவுகணை சோதனை நடத்தியது. இது இந்த வாரத்தில் ஏவப்பட்ட 3-வது ஏவுகணையாகும்.