2 குறுகிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா மீண்டும் பரிசோதித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியை தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக நடத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், அந்த 2 நாடுகளின் பரம எதிரியாக கூறப்படும் வடகொரியா நேற்று 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
2 ஏவுகணைகள் பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பான 5 புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகம் இன்று பகிர்ந்துள்ளது.
அவசியம் ஏற்பட்டால் எதிரிகளை தாக்கி அழிக்கும் வகையில் நடத்தப்பட்ட பயிற்சியே இது என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணைகள் 611 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கிழக்கு கடற்பகுதியில் உள்ள தீவில் இருந்த இலக்கை தாக்கி அழித்ததாக வடகொரியா கூறியுள்ளது.