அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி, நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதானி குழுமத்திற்கு எதிராக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம், கணக்கு மோசடி மற்றும் பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சண்டிகர், மத்தியபிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்.