ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் என்று மேற்கத்திய நாடுகள் நிர்ணயித்துள்ள வரம்பை இந்தியா மீறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் அந்நாட்டின் கச்சா எண்ணெய் மதிப்பை மேற்கத்திய நாடுகள் குறைத்தன.
இதை சுட்டிக்காட்டி, வர்த்தகர்கள் மற்றும் வங்கிகளுக்கு விலை வரம்பை மீறக்கூடாதென இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஜி20 மாநாட்டுக்கு இடையே அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளுடன் இந்தியா அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா அளித்த விளக்கத்தால் அந்நாடுகள் திருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.