தாய்லாந்தில் பல்வேறு வகையான துரித உணவுகளைத் தின்று கொழுப்பினால் பெரும் தொப்பை வைத்துள்ள குரங்கின் எடையைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தலைநகர் பாங்காக் பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ள நிலையில் அங்கிள் ஃபேட்டி மற்றும் காட்ஸில்லா என்று பெயரிடப்பட்ட இரு குரங்குகள் மிகவும் குண்டாக இருந்தன. சாதாரண குரங்கின் எடை 8 முதல் 10 கிலோ எடையில் இருக்கும் நிலையில் காட்ஸில்லாவின் எடை 27 கிலோவாக உள்ளது.
இதன் தொப்பையோ தரையில் இழுத்தபடி செல்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறது. இதையடுத்து இந்தக் குரங்கினைப் பிடித்து சிகிச்சையளித்து அதன் எடையைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.