புதுச்சேரியில் 13 ஆண்டுகள் கழித்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது பெருமையான விஷயம் என்றும், இதற்காக முதலமைச்சர் மற்றும் நிதித்துறையுடன் தான் இணைந்து செயல்பட்டதாகவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் நல்ல உதாரணம் என தெரிவித்தார்.