காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான குரீந்தர்சிங், லண்டனுக்குத் தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு திரட்ட முக்கியக் காரணமாக இருந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் புறப்பட இருந்த குரீந்தர்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
காலிஸ்தான் தலைவர் என்று கூறப்படும் அம்ரித் பால்சிங்கின் சமூகவலைதளக் கணக்குகளை குரீந்தர்சிங் பராமரித்து வந்துள்ளார். கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.