குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வடகொரியா சோதித்துப் பார்த்ததாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
வட கொரியா ஏவுகணை சோதனையின் போது, ஒரு ஏவுகணையை சுட்டு வீழ்த்தினால் கூட, அது வட கொரியா மீது போர் தொடுத்ததற்கு ஒப்பாகும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு கடற்கரையோர நகரமான நாம்போவுக்கு அருகே கடலை நோக்கி இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.