இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் , இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆக்கப்பூர்வ பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா உதவிசெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இருதரப்பிலும் நீண்ட காலமாக நடைபெற்று வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறியுள்ள அவர், இருதரப்புக்கும் உதவி புரியும் வண்ணம் அமெரிக்கா பங்களிப்பை செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.