இந்தோனேஷியாவின் மலாங்கில் அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 135 பேர் இறந்த நிலையில், போட்டியை நடத்திய 2 அலுவலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது நிகழ்ந்த வன்முறைக்கு மைதானத்தை முறையாக பராமரிக்காத காரணமென கூறி போட்டி ஒருங்கிணைப்பாளருக்கு 18 மாதங்களும், பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி பாதுகாப்பு அதிகாரிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.