சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் ஆலைகளின் கழிவுநீர் கலந்துள்ளதால் ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் மாறி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றின் முகத்துவாரத்தில் நன்னீரும், உப்பு நீரும் கலந்திருப்பதால் இயற்கையாகவே இறால் மற்றும் நண்டுகளின் இனப்பெருக்க பகுதியாக உள்ள நிலையில், தற்போது கழிவுநீர் கலந்திருப்பதால் இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய விசாரணை நடத்த வேண்டுமென அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.