நாளை மறுநாள் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கப்படுவதாக கவிதா தெரிவித்துள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இன்று ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆனால் கூடுதல் அவகாசம் கோரி தாம் நாளைமறுநாள் ஆஜராகப் போவதாக கவிதா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் உள்ள கவிதாவின் இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கவிதாவை கைது செய்ய திட்டமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.