இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.
இதில், போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப் பட்டதாக கூறப்படும் நிலையில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.