டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக உள்ள கவிதாவிடம், கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், நாளை அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண்பிள்ளையின் ரிமாண்ட் அறிக்கையில், அவர் கவிதாவின் பினாமி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சவுத் குரூப் இன்டோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில், கவிதா சார்பில், அருண் பங்குதாரராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.