பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணியாத மாணவிகள் மீதும் அவர்களின் கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி, மின்சாரம் உணவு மருந்துகள் போன்ற அடிப்படைத்தேவைகளுக்குப் போராடும் சூழலில் இப்படி ஒரு சட்டம் தேவையா என விமர்சனம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியாளர்களைப் பின்பற்றி பாகிஸ்தான் அரசும் ஹிஜாப்பை கட்டாயப்படுத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.