இந்தியாவில் தேடப்படும் 4 ஐ.எஸ். கொரசான் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா நாடுகளில் செயல்படும் அந்த அமைப்பின் கமாண்டர்களாக செயல்பட்ட அவர்கள் பயங்கரவாத செயல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்தனர்.
அவர்கள் 4 பேரையும் தாங்களே கொன்றதாக சிந்துதேஷ் புரட்சிகர ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.