ஆப்கானிஸ்தானில், கடந்த ஆட்சியில் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே, தாலிபான்கள் திருப்பி அனுப்பிவருகின்றனர்.
ஆப்கானில், 90 சதவீத பெண்கள் கணவன்களால் அடித்து கொடுமை படுத்தப்படுவதாக ஐ.நா. ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்ற கடந்த ஆட்சியில், பல பெண்கள் விவாகரத்து பெற்றனர்.
மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், கடந்த ஆட்சியில் பெற்ற விவாகரத்து செல்லாது என அறிவித்ததுடன், பெண்களை முன்னாள் கணவன்களிடமே வலுக்கட்டாயமாக அனுப்பிவருகின்றனர். பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலோ அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பி சென்றிருந்தாலோ மட்டுமே பெண்களுக்கு விவகாரத்து பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.