மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் ஆளுநர் பதவி ஆகியவை எதிர்க்கட்சியினருக்கு எதிராக தவறாக கையாளப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா, சிபிஐ அமைப்பால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதை சுட்டிக்காட்டி, பிரதமருக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மகாராஸ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஸ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.