கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தான் நிதி ஒதுக்கி வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்காக போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ஜம்முகாஷ்மீர் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, எல்லைக் கோடு அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்து ஏழு கிலோ ஹெராயின், இரண்டு கோடி ரூபாய் ரொக்கம், 15000 அமெரிக்க டாலர்கள், கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன.