மின்சார வாரிய நிலக்கரி இறக்குமதி போக்குவரத்தில் 908 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முன்னாள் தலைமை பொறியாளர் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..
2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மின்சார வாரிய அதிகாரிகளும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தினரும் கூட்டுச்சதி செய்து விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டுவருவதற்கு வரி செலுத்தியதாக போலி ஆவணங்கள் மூலம் 1,028 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 908 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக மின்சார வாரிய முன்னாள் தலைமை பொறியாளர், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தினர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.