வடகிழக்கு மாநிலங்களான நாகாலந்து திரிபுரா மற்றும் மேகாலயாவில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
திரிபுராவில் தனது கட்சியை ஆழமாக வேரூன்றிய பாஜகவுக்கு இத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. நாகாலாந்து மற்றும் மேகாலயாவிலும் பாஜகவின் செல்வாக்கையும் எதிர்க்கட்சிகளின் பலத்தையும் இத்தேர்தல் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குகளை எண்ணுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்ஆணையம் விரிவாக செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.