விழுப்புரம் மாவட்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வுக்காக கல்லூரி மாணவர்களை கால்நடைகளை ஏற்றிச் செல்லும் டாடா ஏஸ் வாகனத்தில் அழைத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.
போதைத்தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த விழுப்புரம் சென்ற சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள், செவ்வாய்கிழமை மாலை வடகரைத்தாழனூர் கிராமத்திற்கு இரண்டு டாடா ஏசி வாகனங்களில் மாணவ, மாணவியரும் பேராசிரியர்கள் 4 பேர் சொகுசு காரிலும் சென்றுள்ளனர்.
காடகனூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்ததில் சாமுவேல் என்ற மாணவர் அங்கேயே உயிரிழந்தார்.
13 மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்த நிலையில், வாகன ஓட்டுநர் சரண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் வஜ்ரா வாகனமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த மாணவரின் உவிழுப்புரம்றவினரான லோகநாதன், பேராசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து நேரிட்டதாக கூறியுள்ளார்.