கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அறிவித்துள்ளது.
இதற்காக, தங்கள் நாட்டிற்குள் வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியுள்ள ஹாங்காங் அரசு, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகையை அறிவித்துள்ளது.
இதற்காக, கொரோனா காலத்திலேயே விமான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி விட்டதாக தெரிவித்துள்ள ஹாங்காங், தங்கள் நாட்டிற்கு வருவோர் குறைந்தபட்சம் 2 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.