துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக அங்கு 34 புள்ளி 2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய உலக வங்கியின் இயக்குனர் Humberto Lopez, நாடு எதிர்கொள்ளும் புனரமைப்பு மற்றும் மீட்பு செலவுகள் எதிர்பார்ப்பதை விட இரண்டரை மடங்கு கூடுதலாக இருக்கும் என்றார்.
துருக்கியில் கடந்த 6ந்தேதி அன்று இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.