சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2021-22 ஆம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை கெஜ்ரிவால் அரசு வெளியிடும் முன்பு அதில் சில திருத்தங்களை சிசோடியா செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதோடு, தனிப்பட்ட முறையில் அவர் லாபம் அடைந்ததாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ, அவரை கைது செய்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கூடுதல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 5 நாள் காவலுக்கு அனுமதிக்க வேண்டுமென சிபிஐ கோரியதைத் தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி வரை சிசோடியாவை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.