சென்னை விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விம்கோ நகர் பணிமனை கடந்தாண்டு செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ பணிமனையை ஒப்பிடும் போது, இந்த பணிமனையில், ரயில்களை தூய்மைப்படுத்த, பெரிய ஆட்டோமேடிக் வாஷ் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு மணி நேரத்தில் 4 மெட்ரோ ரயிலை தூய்மைப்படுத்த முடியும்.