சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் ஸ்கை வாக் எனப்படும் ஆகாய நடை மேம்பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவுற்று, ஏப்ரல் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையம் இடையே 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் 600 மீட்டர் நீளமும் 4.20 மீட்டர் அகலமும் கொண்டது.
இதேபோல் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், கொளத்தூர் பிரதான சாலையையும் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் இருவழி மேம்பாலம், 43 கோடி ரூபாய் மதிப்பில் பெரம்பூர் நெடுஞ்சாலையையும் புளியந்தோப்பு பகுதியையும் இணைக்கும் உயர்மட்டப் பாலம் உள்ளிட்டவையும் ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.