அமெரிக்க வான்பகுதியில் பறந்த சீன உளவு பலூனை போன்ற பலூன் வகை பொருளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மேற்பகுதியில் கடந்த ஆண்டு இந்தியப் படைகள் கண்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூன் வகை வெள்ளைப் பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக தெரியாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அந்தப் பொருளின் படங்கள் பொதுமக்களால் தரையில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மியான்மரில் இருந்து வந்ததா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை என்றும், 3 அல்லது 4 நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து நகர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.