மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட சிறைக்கு ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் கைதிகள், கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர்.
உலகில் அதிக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் எல் சால்வடாரில் ஏராளமான ரௌடிக் குழுக்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 62 பேர் கொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது. அந்நாட்டு அதிபர் நயீப் புகெலேவின் அதிரடி நடவடிக்கையால் அண்மையில் சுமார் 63 ஆயிரம் ரௌடிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் தலைமுடி மழிக்கப்பட்டு, கை,கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அங்கு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.