உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டென்மார்க் பாதுகாப்புத்துறை அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் 1970 களில் இருந்து 77 F-16 ஜெட் விமானங்களை டென்மார்க் வாங்கியதாகவும், அவற்றில் 30 விமானங்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிய மேற்கத்திய நாடுகள் இதுவரை போர் விமானங்களைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.