உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் அமைதி நீடிக்க ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐநா.சபையின் உக்ரைன் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
இத்தீர்மானத்துக்கு 141 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியாவும் சீனாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
முன்னதாக நடைபெற்ற விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் ஷோய்கு குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் சார்பில் பேசிய ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.