உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் கர்ப்பகாலம் அல்லது பிரசவத்தின்போது ஒரு பெண் உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் 3ல் ஒரு பங்கு குறைந்திருந்தாலும் கர்ப்ப கால சிக்கல்களாலும் பிரசவ நேர சிக்கல்களாலும் இந்த இறப்புகள் நிகழ்வதாக அந்த புள்ளிவிவரம் கூறுகிறது. 2020ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சுமார் 800 பெண்கள் வீதம் இவ்வாறு இறந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தான், காங்கோ, சிரியா போன்ற மனித உரிமை மீறல்கள் அதிகமுள்ள நாடுகளிலும் ஏழ்மையான நாடுகளிலும் தான் இந்த இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.