நடிகர் மயில்சாமியின் இறப்பு குறித்து தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது மகன் கூறியுள்ளார்.
சென்னை, சாலிகிராமத்தில் தனது தம்பியுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமியின் மூத்த அன்பு எங்களது அப்பா மயில்சாமி குடிப்பதையே நிறுத்திவிட்டார், தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று வேதனை தெரிவித்தார்.