வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக சர்வதேச கலை கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகள் அடங்கிய விழாவினை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். கல்விக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறீர்களோ அதேபோன்று விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டார்.