ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 30 நாடுகள் இணைந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளன.
இங்கிலாந்து அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, ரஷ்யாவிலும் பெலாரஸிலும் விளையாட்டும் அரசியலும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் விளையாட்டு வீரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு கவலைக்கு உரியது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.