பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்புடைய வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இம்ரான்கான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது தெஹ்ரீக் -இ- இன்சாப் அமைப்புக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். மேலும் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இம்ரான்கானுக்கு மார்ச் 3ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது.