தென் கொரியா, ஜப்பான் நாட்டு ராணுவங்களுடன் கூட்டு போர் பயிற்சி மேற்கொள்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
2 தினங்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ஜப்பான் கடல் எல்லை அருகே வட கொரியா சோதனையிட்டது. அதற்கு எதிர்வினை ஆற்றும்விதமாக தென் கொரியா, ஜப்பான் நாட்டு விமானப்படையினருடன் அமெரிக்கா போர் ஒத்திகையில் ஈடுபட்டது.
இந்நிலையில், 395 கிலோமீட்டர் மற்றும் 337 கிலோமீட்டர் அப்பாலுள்ள இலக்குகளை தாக்கி மேலும் 2 ஏவுகணைகளை, வட கொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.