பிரேசிலின் சா-பாலோ மாநிலத்தில் கன மழையைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
சாவோ பவுலோ மாநிலத்தில், 24 மணி நேரத்தில் 600 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. வெள்ளம், நிலச்சரிவுகளுடன், ஏராளமான மரங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கார்னிவல் கொண்டாட்டத்தை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகளால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத நிலை நேர்ந்தது. 6 மாதங்களுக்கு அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.