ரஷ்யா மீது படையெடுத்த நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை மறந்துவிட வேண்டாம் என பிரான்சு அதிபர் மேக்ரானுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்து இருந்த பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைனால் ரஷ்யா தோற்கடிக்கப்படவேண்டும் என தாம் விரும்புவதாகவும் அதேவேளை அங்கு புதினுக்கு மாற்றாக வேறு ஒரு தலைவரை விரும்பவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜக்கோராவா, பிரான்சு அதிபர் மேக்ரோன் , நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை மறந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.