மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி இழப்பீடாக, பதினாறாயிரத்து 982 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநிலங்களுக்கான நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு தொகையும் வழங்கப்படும் எனவும், மத்திய அரசின் சொந்த நிதி ஆதாரத்திலிருந்தே, இந்த நிதி விடுவிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத ஜிஎஸ்டி இழப்பீடாக ஆயிரத்து 201 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பென்சில் ஷார்ப்னர், ராப் வகை வெல்ல பாகு உட்பட சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.