வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் விளையாட்டுப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கால்பந்துப்போட்டியை இருவரும் கைதட்டி உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
கால்பந்து மைதானத்தில் விமான சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.ராணுவம் அல்லாத நிகழ்ச்சியில் அவர் காணப்படுவது, இதுவே முதல்முறை எனக்கூறப்படுகிறது.
சமீப காலங்களில் அவ்வப்போது கிம் ஜாங் உன்னுடன் அவரது மகளும் வருவதால், அடுத்த அரசியல் வாரிசாக, கிம் ஜாங் உன்னின் மகள் வருவார் எனவும் கூறப்படுகிறது.