மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் ஆபத்தான காட்டுப்பகுதியான டேரியன் கேப் வழியாக பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து,கோஸ்டாரிகாவின் எல்லையை ஒட்டிய மேற்கு கடற்கரை மாகாணமான சிரிக்கியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நேரிட்டது.
விபத்தில் பேருந்தில் இருந்த 66 பயணிகளில் 39 பேர் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.