வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 73 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில், கஸ்ர் அல்காயரிலிருந்து 80 பேருடன் சென்ற படகு, லிபிய கடற்கரையில் கவிழ்ந்தது. இதில், 73 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.