ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில் திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 110 அடி உயர மின் அலங்கார கோபுரம் சரிந்து விழுந்தது. 110 அடி உயர மின் அலங்கார கோபுரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.
குருவையா பாளையம் கிராமத்தில் உள்ள கோவிலில் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கோபுரத்தை தூக்கி நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்ட போது கோபுரம் ஒரு பக்கமாக சாய்ந்தது.